Monday 6th of May 2024 01:25:57 AM GMT

LANGUAGE - TAMIL
தலிபான் தலைவரின் சகோதரர் பலி! பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு!

தலிபான் தலைவரின் சகோதரர் பலி! பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு!


பாகிஸ்தான் - பலுசிஸ்தான் மாகாணம் குவெட்டாவின் புறநகர் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட ஐவரில் ஒருவர் ஆப்கான் தலிபான் இயக்கத் தலைவர் கைபதுல்லாவின் சகோதரர் கபிஸ் அகமதுல்லா ஆப்பானிஸ்தான் ஒன்லைன் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

குவெட்டாவின் புறநகர் பகுதி மசூதியில் நேற்று வெள்ளிக்கிழமை பிராத்தனை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அந்த மசூதியில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து காயமடைந்த நபர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

குண்டு வெடிப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் பொலிஸார் இந்த குண்டு வெடிப்புக்கு 8 முதல் 10 கிலோ எடை அளவிலான வெடிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே இக்குண்டுவெடிப்பில் தலிபான் இயக்கத் தலைவர் கைபதுல்லாவின் சகோதரர் கபிஸ் அகமதுல்லா பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Category: உலகம், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE